நடிகர் திலகத்துக்கு ஜோதிடம் பார்த்த வெண்ணிற ஆடை மூர்த்தி.. அப்படியே பலித்த சம்பவம்.. வியந்து போன சிவாஜி

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் எத்தனையோ படங்களில் மூட நம்பிக்கைக் கருத்துக்களுக்கு எதிரானவராகவும், அதே சமயம் கடவுள் வேடங்களிலும், இறைவன் அடியார் வேடங்களிலும் நடித்துள்ளார். எனினும் ஆழ்ந்த இறை பக்தி கொண்டவர். பல கோவில்களுக்கு யானைகளை தானமாக வழங்கியுள்ளார். இவ்வாறு அடிப்படையில் கடவுள் பக்தி கொண்ட சிவாஜி கணேசனுக்கு நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி ஜோதிடம் பார்த்துக் கூறி அது பலித்த சம்பவமும் நடந்துள்ளது.

வெண்ணிற ஆடை படத்தின் மூலமாக அறிமுகமான மூர்த்திக்கு அந்தப் படத்தின் பெயரே முன்னால் நிலைத்து வெண்ணிற ஆடை மூர்த்தி என்றானது. (ஜெயம் ரவி போல) அடிப்படையில் வழக்கறிஞர் பட்டம் பெற்ற வெண்ணிற ஆடை மூர்த்தி எழுத்து ஆர்வமும் கொண்டவர். திரைக்கதை எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். மேலும் அவருக்கு சோதிடவியலில் ஆழ்ந்த ஞானம் உண்டு. இதற்காக சோதிடக் கலையில் பி.எச்.டி பட்டம் வரை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல நடிகர் நடிகைகளின் வருங்காலத்தை தனது சோதிட ஞானத்தால் கணித்தவர்.

இவ்வாறு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் தனது சோதிட ஞானத்தால் கணித்துக் கூறிய பலன் ஒன்றுபலித்திருக்கிறது. ஒருமுறை சிவாஜி கணேசன் வெண்ணிற ஆடை மூர்த்தியிடம், “யோவ் நீ பெரிய ஜோசியக்காரனாமே.. என்னோட ஜாதகத்தை பார்த்துச் சொல்லு” என்று கூறியிருக்கிறார். மறுநாள் வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் சிவாஜியின் ஜாதகம் கையில் வர கணித்திருக்கிறார்.

அப்போது சிவாஜியிடம் உங்களுக்கு அரசு சம்பந்தமான பதவி கிடைக்கும் என்று கூற நடிகர் திலகம் அதனை அப்போது பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஆனால் வெண்ணிற ஆடை மூர்த்தி கணித்துக் கூறிய அந்த மாதமே அவருக்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவி 1982-ல் கிடைத்திருக்கிறது.

அதன்பின் சில மாதங்கள் கழித்து சிவாஜியும் வெண்ணிற ஆடை மூர்த்தியும் ஒரே ஷுட்டிங்கில் கலந்து கொள்ள அப்போது சிவாஜி நீ சொன்னது மாதிரியே நடந்திருச்சு.. எல்லாரும் வீட்டுல வந்து பார்த்தாங்க நீ ஏன் வரல” என்று கேட்டிருக்கறார். அப்போது வெண்ணிற ஆடை மூர்த்தி குறும்புத் தனமாக உங்களுக்கு அரசாங்க பதவி கிடைக்கும் என கணித்துக் கூறியது நான். நியாயமாகப் பார்த்தால் நீங்கள் தான் என்னை வந்து சந்தித்திருக்க வேண்டும் என்று குசும்புடன் கூறியிருக்கிறார்.

இவ்வாறு நடிப்பு மட்டுமல்லாது சோதிடவியலிலும் பெரிய வல்லுநராக வெண்ணிற ஆடை மூர்த்தி திகழ்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...