முதன் முதலில் கட்அவுட் வைக்கப்பட்ட காமெடி நடிகர் தேங்காய் சீனிவாசன்.. இப்படித்தான் இந்தப் பட்டப்பெயர் ஒட்டிக் கொண்டதா?

தனது தனித்துவமான நடிப்பால் காமெடிக்கு தனி இலக்கணம் எழுதி சினிமாவில் தடம் பதித்து விட்டுச் சென்றவர்தான் தேங்காய் சீனிவாசன். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என இரண்டு தலைமுறை நடிகர்களுடனும் நடித்துப் புகழ் பெற்றவர். காமெடியாகட்டும், குணச்சித்திரம் என நடிப்பில் கலக்கியவர். நடிகர் லூஸ்மோகனைப் போல மெட்ராஸ் பாஷையில் சிறப்பாக பேசி நடித்து பெயர் வாங்கியவர்களில் இவரும் ஒருவர்.

கிட்டத்தட்ட 9000 திரைப்படங்களுக்கு மேல் நடித்த தேங்காய் சீனிவாசன் ஆரம்பத்தில் நாடக நடிகராக தன் சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர். பின்னாளில் நடிப்பையே முழுநேரத் தொழிலாக ஆரம்பித்து பல நாடகங்களில் நடித்தார். ‘கல் மணம்’ என்ற நாடகத்தில் இவரின் நடிப்பு ஏகத்துக்கும் பாராட்டப்பட்டது.தேங்காய் வியாபாரியாக நடிப்பில் பொளந்து கட்டிய சீனிவாசனுக்கு கரவொலி கிடைத்துக்கொண்டே இருந்தது.

இந்த நாடகத்துக்குத் தலைமை ஏற்க வந்திருந்த பிரபலம், மேடையில் சீனிவாசனை அழைத்துப் பாராட்டினார். ‘தேங்காய் வியாபாரியாக மிகச்சிறப்பாக நடித்தார் இந்தப் பையன். இவர், இனிமேல் வெறும் சீனிவாசன் இல்லை. தேங்காய் சீனிவாசன் என்று எல்லோரும் அழைக்கவேண்டும்’ என்றார். அன்று முதல், சீனிவாசன், தேங்காய் சீனிவாசனானார். ‘தேங்காய்’ பட்டத்தை பெயருக்கு முன்னே கொடுத்தவர்… ‘டணால்’ தங்கவேலு.

மேலும் சினிமாவில் இவரது முதல் படம் ஒருவிரல் என்ற திரைப்படமாகும். இந்தப் படம் இவருக்கு மட்டுமல்ல கிருஷ்ணாராவ் என்ற நடிகருக்கும் முதல் படமானது. பின்னர் அந்த நடிகர் ஒருவிரல் கிருஷ்ணாராவ் என்றே அழைக்கப்பட்டார். தேங்காய் சீனிவாசன் அற்புதமான நடிப்பில் வெளிவந்த படம்தான் ஏவி.எம்மின் ‘காசேதான் கடவுளடா’. திரைப்படத்தில் முத்துராமன், ஸ்ரீகாந்த், சசிக்குமார் எனப் பலரும் நடித்தார்கள். ஆனாலும் அவர்களையெல்லாம் ஓவர்டேக் செய்து நடிப்பில் முதலிடம் பிடித்தார் தேங்காய் சீனிவாசன்.

ஒவ்வொரு தீபாவளிக்கும் வெறும் லுங்கியை அணியும் பழக்கம் கொண்ட தங்கவேலு.. இப்படி ஓர் நெகிழ்ச்சி சம்பவமா?

டீக்கடைக்காரராகவும் போலிச்சாமியாராகவும் அசத்தினார். ‘அதே அதே’ என்று சொல்லும்போதெல்லாம் தியேட்டரே குலுங்கியது. ஒரு படத்தின் ஹீரோவுக்கு வைக்காமல், காமெடியனுக்கு கட் அவுட் வைத்தது இந்தப் படத்துக்காகத் தான் இருக்கும். தேங்காய் சீனிவாசனுக்குத் தான் இருக்கும். அந்த அளவுக்கு சாமியார் கதாபாத்திரத்தில், சடுகுடு விளையாடியிருப்பார். மேலும் தில்லுமுல்லு படத்திலும் காமெடி கேரக்டரில் ரஜினியை விட அசத்தியிருப்பார். இவரின் பேத்திதான் நடிகை ஸ்ருதி என்பது கூடுதல் தகவல்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.