ஒவ்வொரு தீபாவளிக்கும் வெறும் லுங்கியை அணியும் பழக்கம் கொண்ட தங்கவேலு.. இப்படி ஓர் நெகிழ்ச்சி சம்பவமா?

வழக்கமாக தீபாவளியன்று நாம் புத்தாடை உடுத்தி, பட்டாசு கொளுத்தி, பலகாரங்கள் சாப்பிட்டு இனிமையாக தீபாவளியைக் கொண்டாடுவோம். ஆனால் இந்த நடைமுறையிலிருந்து சற்று மாறுபட்டவர் தான் நடிகர் தங்கவேலு. டணால் தங்கவேலு என்றால் தான் தெரியும். “சிங்காரி” படத்தில் “டணால்” என்ற வார்த்தையை பயன்படுத்தியதால், டணால் தங்கவேலு என்றே இவர் அழைக்கப்பட்டார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக காமெடியில் வயிறு குலுங்க சிரிக்கவும் வைத்து, சிந்திக்கவும் வைத்தவர். இவரது மன்னாரன் கம்பெனி காமெடி வெகு பிரபலம்.

எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதி படத்தில்தான் தங்கவேலுவும் அறிமுகமானார். எம்ஜிஆருக்கு சினிமா வாய்ப்பை பெற்றுத் தந்த எம்.கே.ராதாதான், தங்கவேலுவிற்கும் சினிமா வாய்ப்பை பெற்றுத் தந்தார்” என்று நினைவு கூர்ந்திருந்தார்.

தங்கவேலுவிடம் 2 விஷயங்கள் பலரையும் இன்றுவரை ஆச்சரியப்படுத்துகிறது.. நாடகத்தில் நடித்த காலத்தில் இருந்து கடைசிவரை அவருக்கு உறுதுணையாக இருந்தவர் கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன்தான்.. அதனால்தான், என்.எஸ்.கே வின் உருவப்படத்தை நன்றியை தெரிவிக்கும்விதமாக கடைசிவரை கழுத்தில் அந்த செயினை அணிந்திருந்தாராம் தங்கவேலு.

புரோட்டா மாஸ்டரான பிரபல ஹீரோ.. பட வாய்ப்புகள் இல்லாதால் நடிகர் எடுத்த திடீர் முடிவு

அதேபோல, தீபாவளி பண்டிகை நாளில், எப்போதுமே லுங்கியும் தொப்பியும் அணிந்து கொள்வாராம்.. ஒருமுறை அவரிடமே பத்திரிக்கையாளர் கேட்டார்கள்.. எதுக்காக தீபாவளி பண்டிகை நாளில் லுங்கியும் தொப்பியும் போடுகிறீர்கள்? என்று கேட்டார்கள்.. அதற்கு தங்கவேலு, “ஒருமுறை தீபாவளி அன்னைக்கு ஒரு நாடகம் போட வேண்டியிருந்தது.. அப்போது துணி வாங்குவதற்கு என்கிட்ட காசு எதுவும் இல்லை.. அப்போது ஒரு லுங்கி வியாபாரியான முஸ்லிம் பாய், என்னிடத்தில் எனக்கும், என்னுடைய நாடக கம்பெனியில் வேலை செய்கிறவர்களுக்கும் லுங்கியை அன்பளிப்பாக கொடுத்தார். நானும் என்னுடைய நாடகக்குழு அனைவரும் அந்த லுங்கியை அணிந்து நடித்தோம்.

அவர் மட்டும் அன்று உதவாமல் போயிருந்தால், அன்றைய தினம் நிறைய சிக்கல்களை நாங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். அவர் கொடுத்த ஞாபகமாகவே, எவ்வளவுதான் எனக்கு வசதி வந்தாலும், தீபாவளி அன்று இந்த லுங்கியும் தொப்பியை அணிந்து கொண்டிருக்கிறேன் என்றாராம்.  மேலும் தமிழ் தவிர பிற மொழிப்படங்கள் எதிலும் நடிப்பதில்லை என்பதை தன் கடைசிவரை மூச்சுவரை கடைப்பித்த தமிழ்ப்பாற்றாளர்தான் நம்முடைய தங்கவேலு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.