சத்யராஜை சீக்கிரம் கல்யாணம் பண்ணச் சொன்ன பிரபல காமெடி நடிகர்.. இதற்காகத்தானா? 90’s KIDS கேட்டுக்கோங்க

இந்த நூற்றாண்டு 2K Kids இளைஞர்கள் கூட விரைவிலேயே திருமணம் செய்து கொள்ளும் காலகட்டத்தில் 90’s Kids இளைஞர்கள் பலர் இன்னமும் பேச்சுலர்ஸ்களாக நிறையபேர் இருக்கின்றனர். ஆனால் நாளுக்குநாள் அவர்களுக்கு வயது ஏறிக்கொண்டே செல்கிறது. ஆனால் திருமணம் மட்டும் குதிரைக் கொம்பாக உள்ளது. எனவே 90களில் பிறந்தவர்களை நேற்றுப் பிறந்து படிப்பு முடித்து, வேலைக்குச் சென்று, திருமணம் முடித்து செட்டிலான 2கே கிட்ஸ் மீம்ஸ்களில் கலாய்தத்து வருகின்றனர்.

இதைத்தான் அப்பொழுதே ஒரு காமெடி நடிகர் அனுபவ ரீதியாக சொல்லியிருக்கிறார். அந்த காமெடி நடிகர் தான் சுருளி ராஜன். நாகேஷ்க்கும், கவுண்டமணிக்கும் இடைப்பட்ட காலங்களில் தமிழ் சினிமாவினை தனது காமெடியால் ஆட்சி செய்தவர். ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 50 படங்கள் வரை நடித்து சாதனை படைத்தவர். மாந்தோப்புக் கிளியே படத்தில் கஞ்சனாக நடித்து எவர்கிரீன் காமெடியைக் கொடுத்தவர்.

இந்நிலையில் நடிகர் சுருளிராஜன் சத்யராஜுக்கு திருமணம் ஓர் அறிவுரை ஒன்றைச் சொல்லியிருக்கிறார். அவர் சத்யராஜிடம் 25 வயதிற்குள் திருமணத்தினை முடித்து விடு. ஏனெனில் அப்போதுதான் உனக்கு 50 வயதாகும் போது உன் வாரிசுகளுக்கு 25 வயதை நெருங்கிவிடும். அவர்களும் உனக்கு தோள் கொடுக்க வந்து விடுவார்கள். என்று கூறியிருக்கிறார். இவர் இவ்வாறு கூறியதற்குப் பின் அவருக்கே ஓர் அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.

வளையல் கடை வைத்திருந்தவருக்கு வந்த வாய்ப்பு.. மண்வாசனையில் ஹீரோவாக பாண்டியன் தேர்வானது இப்படித்தான்…

அதாவது சுருளிராஜன் பெரும்பாலும் வயதான கேரக்டர்களிலேயே நடித்து வந்ததால் அவருக்குப் பெண் தர யோசித்தனராம். இவருக்கு வயது அதிகம் இருக்கும் என்றும் பேசி திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்ததாம். இதற்கு ஓர் முடிவுகட்ட தானே ஒரு படத்தில் இளம் ஹீரோவாக நடித்து தன்னுடைய வயது குறைவுதான் என்பதை அந்தப் படத்தின் மூலம் நிரூபித்தாராம் சுருளிராஜன். மேலும் திருமணம் முடிந்தவுடன் அவருக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டராம். ஆனால் அது நடக்கவே இல்லையாம். அவருக்கு மூன்றுமே ஆண் வாரிசுகள்தான்.

சுருளி ராஜன் கொடுத்த இந்த அட்வைஸை சத்யராஜ் ஒருமுறை கார் செல்லும்போது அவரது மகன் சிபிராஜ் கார் ஓட்டிக் கொண்டிருக்க, இவர் நிம்மதியாக அமர்ந்து செல்லும் போது நினைவு கூர்ந்தாராம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.