“நீங்க என்ன பெரிய புலவரா?“ “இந்த உடம்புக்கு நடிப்பு ஆசையா?“ மாறி மாறி மோதிய வாலி-நாகேஷ்

கவிஞர் வாலியும், நகைச்சுவை சக்கரவர்த்தி நாகேஷூம் இணை பிரியாத நண்பர்கள் என்று தமிழ்நாட்டிற்கே தெரியும். ஆனால் இவர்கள் இருவரின் நட்பு ஆரம்பிப்பதற்கு முன் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசியிருப்பர். பின் நாளடைவில் இந்த மோதல் தான் இணைபிரியா நட்பிற்கு இலக்கணமாக அமைந்தது.

சினிமாவில் பாடல் எழுத வேண்டும் என்ற ஆசையுடன் சென்னை வந்த வாலி, ஒருமுறை தனது நண்பர் நடித்த தாமரைக்குளம் படத்தின் ஷூட்டிங்கை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வாலியின் நண்பன் கோபி அந்த படத்தின் நாயகனாக நடித்திருந்தார்.

எடுடா அந்த ரிவால்வர..! மிரட்டல் விடுத்த நபரை தனது பாணியில் விரட்டிய எம்.ஆர்.ராதா.. பயங்கரமான ஆளா இருப்பாரு போலயே..?!

வாலி படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது, அவருக்கு ஒரு நடிகரை கோபி அறிமுகம் செய்து வைத்துள்ளார். இவருக்கு இது தான் 2-வது படம் பேர் குண்டுராவ் என்று கூறியுள்ளார். அவரை பார்த்த வாலி, இந்த உடலை வைத்துக்கொண்டு உங்களுக்கு நடிப்பு ஆசை வந்ததே தப்பு என்று கூறியுள்ளார். இதை கேட்ட குண்டுராவ், நீங்கள் கூட தான் சினிமாவில் பாடல் எழுத வந்திருக்கிறீங்க, எந்த நம்பிக்கையில் வந்தீங்க, நீங்கள் என்ன பெரிய புலவரா என்று கேட்டுள்ளார்.

இப்படி தொடக்கத்தில் மோதலாக தொடங்கிய இவர்களின் சந்திப்பு நாளடைவில் பிரிக்க முடியாத நட்பாக மாறியது. அந்த புதுமுக நடிகர் குண்டுராவ் தான் காமெடி நடிகர் நாகேஷ். அதன்பிறகு இருவரும் ஒரே அறையில் தங்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறியுள்ளனர். மேலும் அறையில் வாய்ப்பு இல்லாமல் இருந்தபோது நாகேஷின் வற்புறுத்தலால் பல பாடல்களை எழுதியுள்ளார் வாலி.

அப்படி எழுத ஆரம்பித்தவர் இன்று தமிழ் சினிமா வரலாற்றில் அதிக பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். எம்.ஜி.ஆர் முதல் சிம்பு வரை ஐந்து தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதிய ஒரே கவிஞர் வாலிதான். இவருக்கும் கண்ணதாசனுக்கும் இடையேதான் ஆரோக்கியமான பாடல் போட்டி இருந்தது. இவர்கள் போட்டியால் தான் தமிழ் இசைத் துறைக்கு பல முத்தாக அமைந்த பாடல்கள் கிடைத்தன.

1959-ல் வெளியான அழகர்மலைக் கள்வன் என்ற படத்தில்தான் வாலி முதன் முதலாக பாடலாசிரியராக அறிமுகமாகி கிட்டத்தட்ட 15,000 பாடல்களுக்கு மேல் இயற்றியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.