காமெடி நடிப்பில் கலக்கிய ஜூனியர் பாலையா.. கே.பாக்யராஜின் ஆஸ்தான நடிகர்..!

பழம்பெரும் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் தான் ஜூனியர் பாலையா. நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடித்த இவர்,  1953 ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் ரகு என்றாலும் டி.எஸ்.பாலையாவின் மகன் என்பதால் அவரை திரையுலகினர் ஜூனியர் பாலையா என்று அழைத்தனர்.

டி.எஸ்.பாலையாவின் மூன்றாவது மகனான ஜூனியர் பாலையா, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுந்தன்கோட்டை என்ற பகுதியில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தான் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து சென்னைக்கு குடியேறினார்.

3 மனைவிகள், 7 குழந்தைகள்.. ரீமேக் உரிமை கொடுக்க மறுத்த ஸ்ரீதர்.. நடிகர் டிஎஸ் பாலையாவின் அறியப்படாத பக்கம்..!

கடந்த 1975ஆம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவகுமார், கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘மேல்நாட்டு மருமகள்’ என்ற திரைப்படத்தில் தான் ஜூனியர் பாலையா முதல்முறையாக அறிமுகமானார்.

அதன் பிறகு சிவாஜி கணேசனுடன் ‘இளைய தலைமுறை’, ‘தியாகம்’, ‘எமனுக்கு எமன்’ ஆகிய படங்களில்  நடித்தார். இதனையடுத்து கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘வாழ்வே மாயம்’ என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் நண்பராக நடித்திருப்பார்.

மேலும்  ராமராஜன் நடித்த ‘கரகாட்டக்காரன்’, ‘கோபுர வாசலிலே’, ‘சின்னத்தாயி’, ‘விக்னேஷ்வர்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார். இயக்குனர் கே.பாக்யராஜ் தனது பல படங்களில் ஜூனியர் பாலையாவுக்கு வாய்ப்பு கொடுத்தார். குறிப்பாக ‘அம்மா வந்தாச்சு’ என்ற திரைப்படத்தில் ஒரு குணச்சித்திர கேரக்டரில் நடித்த ஜூனியர் பாலையா,  ராசுகுட்டி திரைப்படத்தில்  சூனா பானா என்ற கேரக்டரில் அசத்தியிருப்பார். இதனை அடுத்து சுந்தரகாண்டம் திரைப்படத்தில் ஆசிரியராகவும் நடித்திருப்பார். மேலும் ‘வீட்ல விசேஷங்க’ படத்தில் அவரது நடிப்பு சூப்பராக இருக்கும்.

ஒரே கதையை இயக்கிய பாரதிராஜா, பாக்யராஜ்… இரண்டும் வெற்றி பெற்ற ஆச்சரியம்..!

அஜித் நடித்த ‘அமராவதி’ திரைப்படத்தில் ரிக்ஷா ஓட்டுநராக நடித்த ஜூனியர் பாலையா அஜித்தின் அடுத்த படமான ‘பவித்ரா’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். இவ்வாறு பல படங்களில் குணச்சித்திர மற்றும் காமெடி கேரக்டரில் நடித்த ஜூனியர் பாலையா, அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில்  ஜூனியர் வழக்கறிஞராக நடித்திருப்பார்

2021ஆம் ஆண்டு வெளியான ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தில் ஜூனியர் பாலையா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில் அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. இதனால் இந்த படமே அவரது கடைசி படமாக இருந்தது. மேலும் ‘சித்தி’, ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ உள்ளிட்ட சீரியல்களிலும் ஜூனியர் பாலையா நடித்திருந்தார்.

ஒரே தீபாவளியில் ரிலீஸ் ஆன சிவாஜி, கமல், ரஜினி படங்கள்.. ஆனால் ஜெயித்தது பாக்யராஜ் தான்..!

சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் ஜூனியர் பாலையா வாழ்ந்து வந்த நிலையில் திடீரென அவருக்கு இன்று (2-11-2023) அதிகாலை மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் காலமானதாகவும் கூறப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என தெரிகிறது. அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews