நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனாவுக்கு பலி

b833185443080006b3e660a48ee63564

பிரபல காமெடி நடிகர் பாண்டு கொரோனாவுக்கு பலியாகி உள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் பாண்டு என்பது அனைவரும் அறிந்ததே. இவர் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ள நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 74 

கொரோனா பாதிப்பு காரணமாக நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாண்டு காலமானதாகவும் அவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகர் பாண்டுவுக்கு 3 மகன்கள் உள்ளனர் என்பதும் இவர்கள் மூவரும் கேப்பிடல் லெட்டர்ஸ் என்ற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம்தான் அதிமுகவின் கொடியை வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 

c7c01fd0ef2ded54899926d6a9ce61d6

மேலும் பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளையும் இவரது நிறுவனம்தான் வடிவமைத்துக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.