
பொழுதுபோக்கு
நடிகர் தனுஷ் வேண்டாம் என கூறிய காமெடி நடிகர்! காரணத்தின் பின்னணி தெரியுமா?
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்புக்கு தீனி போடும் புதுப்பேட்டை, அசுரன், கர்ணன் போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது மனைவியும், நடிகர் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யாவை பிரிந்ததாக அறிவித்தனர். இது ரசிகர்களிடம் அதிர்ச்சியை கொடுத்தது.
இவர் தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம் , வாத்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி கிரே மேன்’ படத்தினை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் ‘தி கிரே மேன்’ படத்தை இயக்கியுள்ளனர்.
இதனிடையே கடந்த 2009-ல் வெளியான ‘தி கிரே மேன்’ என்ற நாவலை தழுவி இப்படம் பிரமாண்ட பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015ல், தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ஹிட் படம் மாரி. இதையடுத்து, இப்படத்தின் 2-ஆம் பாகமும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. நடிகர் தனுஷ் இப்படத்தில் ரோபோ சங்கர் நடிப்பதற்கு மிகவும் பயந்தார். என்ன காரணம் என்றால் நடிகர் தனுஷ்யை விட ரோபோ சங்கர் உருவத்தில் பெரியதாக இருப்பார்.
‘குக் வித் கோமாலி 3’ டைட்டில் வின்னர் இவர்தானா?
