கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையை தமிழக மக்கள் யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள். ஏனென்றால் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பெரும் இழப்புகளை தந்தது.
அதிலும் குறிப்பாக பயிர் விவசாயிகள் நிலங்களும் மழைநீரால் சேதமடைந்தன. இதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்தடுத்து மத்திய அரசிடம் நிவாரண நிதி தொகைக்காக கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வெள்ள நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அதன் வரிசையில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மழை, வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசின் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டால்தான் கடன் சுமையிலிருந்து மீள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
மழை, வெள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.