Connect with us

‘தலைமை ஏற்க வா தலைவா’ உளுந்தூர்பேட்டையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு…

ops poster

செய்திகள்

‘தலைமை ஏற்க வா தலைவா’ உளுந்தூர்பேட்டையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு…

உளுந்தூர்பேட்டையில் ஓபிஎஸ் தலைமை ஏற்க வாரீர் என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

1 1/2 கோடி தொண்டர்களும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பின்னால் தான் உள்ளனர். அவர் எங்கே சென்றாலும் தொண்டர்கள் கூட்டமும், கட்சியினர்களின் வரவேற்பும், ஓபிஎஸ் க்கு தான் உள்ளது. அதிமுக ஒன்றிணைய வேண்டும், 1 1/2கோடி தொண்டர்கள் ஒரே குடையின் கீழ் வரவேண்டும் என்ற ஓபிஎஸ்ன் குரல் அனைத்து தொண்டர்களின் மனதிலும் பாதிப்பு ஏற்படுத்தி, அதிமுக ஓபிஎஸ் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அனைவருடைய மனதிலும் எண்ணமாக உள்ளது.

அதிமுக தொண்டர்களின் விருப்பம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான். ஆனால் அதிலிருந்து தனித்து நிற்பவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள். முன்னாள் அமைச்சர் உதயகுமார் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருப்பார். அதிமுக ஒன்றிணைய வேண்டும், ஜெயலலிதாவின் எண்ணம் போல் 100 ஆண்டுகள் நீடித்து நிலைக்க வேண்டும் என்பதே ஓபிஎஸ்ன் நோக்கமாக உள்ளது.

அதிமுக கட்சிக்கொடியும், ரெட்டை இலை சின்னமும் ஓபிஎஸ்டம் உள்ளதால் அதை நாங்கள் கைப்பற்ற தேவையில்லை. அதிமுக சிறிதளவு கூட பிளவுபடாமல் ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் ன் விருப்பம் தான் தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. ஓபிஎஸ் எல்லா பதவிகளையும் வகித்து பார்த்து விட்டார். ஜெயலலிதாவால் இரண்டு முறை முதல்வராகவும், துணை முதல்வராகவும், அதிமுக பொருளாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும், இருக்கும் அவருக்கு பதவி ஆசை இருக்க முடியுமா? எனகேள்வி எழுப்பி அவர் ,அதிமுக ஒன்றிணைய வேண்டும் ,1 1/2கோடி தொண்டர்களும் ஒன்றாக வேண்டும் என்ற ஓபிஎஸ் எண்ணத்தின் படி அனைவரும் அவர் வழியைப் பின்பற்றி நடப்பார்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரப் பகுதி முழுவதும் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மாவட்ட இணை செயலாளர் வேங்கையன் என்பவர் ஒட்டி உள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் ஒன்றிணைந்த அதிமுகவை உருவாக்கிட அய்யா ஓபிஎஸ் தலைமையேற்க வாரீர் வாரீர் என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்டு இருந்தது. நகரின் முக்கிய இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top