கலர்ஃபுல்லான க்ரீன் சிக்கன் கிரேவி!!

d7aa8771c6c3da96520b74a6a07317cd

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையில் கலர்ஃபுல்லான க்ரீன் சிக்கன் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
சிக்கன் – 1/2 கிலோ
இஞ்சி – 1 துண்டு, 
பூண்டு – 1
வெங்காயம் – 2
தக்காளி- 2
புதினா இலை – 1 கட்டு
கொத்தமல்லி இலை – 1 கட்டு
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: 
1.    மிக்சியில் இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இழை, புதினா இலை, பச்சை மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர்விட்டு மைய அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு வதக்கி அரைத்த கலவையை சேர்த்து வதக்கவும்.
3.    அடுத்து சிக்கன் துண்டுகளைப் போட்டு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவிட்டு எண்ணெய் பிரியும்போது இறக்கினால் க்ரீன் சிக்கன் கிரேவி ரெடி.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews