
தமிழகம்
புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் சண்டையிட்ட 10 கல்லூரி மாணவிகள் சஸ்பெண்ட்..!!
தமிழகத்தில் ஆங்காங்கே மாணவ மாணவிகளிடையே பரபரப்பான சண்டைகள் உருவாகிக் கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பள்ளி மாணவர் ஆசிரியரை தகாத வார்த்தைகளில் திட்டியதோடு மட்டுமல்லாமல் கை ஓங்கி அடிக்க முயற்சித்த வீடியோவும் இணையத்தில் பரவியது.
அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் கல்லூரி மாணவிகள் திடீரென்று சாலையில் முடியை பிடித்துக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நாளுக்கு நாள் கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது.
அதுவும் குறிப்பாக நேற்றைய தினம் சென்னை புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் அரசு கல்லூரி மாணவிகள் மோதிக்கொண்டனர். இந்த சண்டையால் பொது மக்களிடையே அமைதி குறைந்ததாக காணப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாலையில் மோதலில் ஈடுபட்ட மாணவிகள் 10 பேரை சஸ்பெண்ட் செய்து அரசு கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
