ஓடும் ரயிலில் படிக்கட்டில் நின்று கொண்டு செல்பி.. கல்லூரி மாணவிகளின் செயலால் பரபரப்பு

ஓடும் ரயிலில் படிக்கட்டில் நின்று கொண்டு கல்லூரி மாணவிகள் செல்பி எடுக்கும் ஆபத்தான செயலை செய்து வரும் நிலையில் இதற்கு பெரும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரயில்களில் கல்லூரி மாணவர்கள்தான் சேட்டைகளில் ஈடுபடுவார்கள் என்றால் கல்லூரி மாணவிகளும் அதற்கு இணையாக சில செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக பெண்கள் பெட்டியில் பயணம் செய்யும் கல்லூரி மாணவிகள் படிக்கட்டு அருகே நின்று கொண்டு ஆபத்தான நிலையில் செல்பி எடுத்து வருவதாகவும் அந்த புகைப்படங்களை இணையதளங்கள், சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருவதாகவும் தெரிகிறது.

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ரயிலில் கல்லூரி மாணவிகள் சிலர் ஆபத்தான நிலையில் செல்பி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை எடுத்து அந்த புகைப்படங்களுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கையில் செல்போனை பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் கம்பியை பிடித்துக் கொண்டு செல்பி எடுக்கும் இந்த நிகழ்விற்கு சமூக ஆர்வலர்கள் கடும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்ற சாகசத்தில் ஈடுபடும் கல்லூரி மாணவிகள் தங்களுடைய எதிர்காலத்தையும் பெற்றோர்களையும் நினைத்து பார்க்கவேண்டும் என்றும் பாதுகாப்பு உணர்ந்து இனியாவது இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.