சென்னையில் பரபரப்பு!! அரசு பேருந்தை வழிமறித்த கல்லூரி மாணவர்கள்..!!!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தை பொறுத்தவரையில் கல்லூரி மாணவர்கள் அட்ராசிட்டியில் ஈடுப்படுவது தொடர்ந்து வருகிறது. இத்தகைய சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் இன்னும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் பிரபல கல்லூரி மாணவர்கள் சுமார் 10 பேர் கொண்ட குழுவினர் மாநகர பேருந்தை நிறுத்தி மாணவிகள் முன்னிலையில் வீடியோ எடுத்தாக கூறப்படுகிறது.

கோகுல் ராஜ் கொலை வழக்கு: சுவாதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!!

இந்நிலையில் தங்களுடைய கல்லூரி கெத்து என்பதை காட்டுவதற்காக ரீல்ஸ் செய்வதற்காக வீடியோ எடுத்தாக தெரிகிறது. இதனை பார்த்த சக மாணவிகள் டுவிட்டர் மூலமாக போக்குவரத்து காவல்துறையினருக்கு அனுப்பியுள்ளனர்.

இதனை பார்த்த போக்குவரத்து காவல்துறையினர் சம்மந்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அடுத்த 2 மணிநேரத்தில்.. இந்த மாவட்டங்களில் கனமழை?

மேலும், மகளிர் கல்லூரி முன்பு இது போன்ற சம்பவங்கள் நடைப்பெறுவதால் மாணவிகள், பெற்றோர்கள் மத்தியில் பதற்றம் நிலவியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.