
தமிழகம்
இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனை; கல்லூரி மாணவர்களை அலோக்காக தூக்கிய போலீஸ்!
மதுரையில் இன்ஸ்டாகிராமில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடம் இருந்த கஞ்சா, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை கல்லூரிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக மாநகரின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வைத்து கஞ்சா பொட்டலங்களை மாணவர்களக்கு சப்ளை செய்வதாக மாநகர காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் தல்லாகுளம் போலீசார் தனிப்படை அமைத்து கண்கணித்தனர்.
இதன் நிலையில் மதுரை ஜம்புரோபுரம் மார்க்கெட் பகுதியில் மாணவர்கள் சிலர் இன்ஸ்டாகிராம் (ஆன்லைனில்) கஞ்சா பொட்டலங்கள் சக மாணவர்களுக்கு விற்பனை செய்வதை அறிந்த போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் சக மாணவர்களுக்கு கஞ்சாவை சிறிய பொட்டலங்களாக போட்டு 50 ரூபாய், 100 ரூபாய்க்கு கிடைக்கும் எனவும், தற்போது நிற்கும் பகுதியை லோகேஷன் ஷேர் செய்து விற்பனை செய்வது தெரிய வந்தது.
இது தொடர்பாக கிஷோர், மணிகண்டன், சந்தோஷ் குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்கள், இருசக்கர வாகனம், 3 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீசில் பிடிபட்ட மூன்று பேரும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டா, பேஸ் புக் மூலம் விற்பனை செய்வதால் எளிதில் போன் நம்பர் யாருக்கும் தெரியாது என்பதால் இப்படி விற்பனை செய்வதாக கூறினர். மூன்று பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
