பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய கல்லூரி மாணவர்: இணையத்தில் வைரல்..!!

நம் தமிழகத்தை பொறுத்தவரையில் பள்ளி மாணவர்கள் வெளியிடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகுவது உண்டு. குறிப்பாக பல்வேறு வீடியோக்கள் சர்ச்சைக்குரியதாகவே காணப்படுகிறது.

அந்த வகையில் பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவி ஒருவருக்கு பாலிடெக்னிக் படிக்கும் மாணவர் ஒருவர் கல்லூரி சீருடையில் தாலி கட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் கடலூர் அடுத்த காந்தி சிலை அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்கு பள்ளி மாணவிக்கு, கல்லூரி மாணவர் சீருடையில் தாலி கட்டியுள்ளார்.

இது தொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சம்பவம் குறித்து சிதம்பரம் நகர பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment