பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் திடீர் மரணம்: சென்னையில் பரபரப்பு!

பரோட்டா சாப்பிட கல்லூரி மாணவர் ஒருவர் திடீரென மரணம் அடைந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னையை அடுத்த கொளத்தூர் என்ற பகுதியில் 17 வயது கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று இரவு பரோட்டா சாப்பிட்டார். அதன் பின்னர் அவர் வீடு வந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென 3:00 மணிக்கு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரவில் பரோட்டா சாப்பிட கல்லூரி மாணவர் அதிகாலையில் மரணமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதனை அடுத்து கல்லூரி மாணவரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்பதும் அவருடைய உடல் பிரேத பரிசோதனை பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print