Connect with us

மீண்டும் அதிர்ச்சி!! ஆன்லைன் ரம்மியால் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி!!

online rummy

தமிழகம்

மீண்டும் அதிர்ச்சி!! ஆன்லைன் ரம்மியால் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி!!

கடந்த சில நாட்களாகவே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து, தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் லைவாசல் பகுதியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த விரக்தியில் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை முயற்சி எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள தலைவாசல் அருகே இருக்கும் சதாசிவபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரது மகன் சூரியபிரகாஷ் (வயது 20) தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் மாணவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சுமார் ரூ. 75 ஆயிரம் ரூபாய் இழந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சூரியபிரகாஷ் வீட்டில், விஷம் குடித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் ஆபத்தான நிலையில் மாணவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், மாணவனின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது,

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top