Connect with us

பட்டப்பகலில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு : 3 பேர் கைது !!

arival

தமிழகம்

பட்டப்பகலில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு : 3 பேர் கைது !!

தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் பட்டப்பகலில் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் நேற்று மாலை கல்லூரி மாணவர்கள் நின்றிருந்தனர். அப்போது மதுபோதையில் இருந்த கார்த்திக் என்பவரிடம் தகராறு ஏற்பட்டது.

அப்போது மாணவர்கள் அனைவரும் கார்த்திக்கை அடிக்க சென்றதால் அவர் அங்கிருந்து சென்றுள்ளார். சிறிது நேரத்தில் கழித்து  நண்பர்களுடன் வந்த கார்த்திக் அந்த மாணவர்கள் இல்லாததால் அதே கல்லூரியை சேர்ந்த வைரமுத்துவை அரிவாளால் வெட்டியுள்ளார்.

வைரமுத்துவின் கையில் லேசான காயம் ஏற்பட்ட நிலையில் அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். பின்னர்  கார்த்திக் உள்ளிட்ட மூன்று பேரையும் காவல்துறையினர்  கைது செய்தனர்.

மேலும், கல்லூரி மாணவரை பட்டப்பகலில் அரிவாளால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி இருப்பது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top