கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை… போலீசார் தீவிர விசாரணை!

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வந்த மாணவி ஜெயவர்ஷினி என்பவர், வயிற்று வலி காரணமாக தனது வீட்டின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வெப்படை அடுத்துள்ள எலந்த குட்டை பகுதியே சேர்ந்தவர் சந்திரசேகர்(40 ). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் ஜெயவர்ஷினி குமாரபாளையத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார்.நேற்று காலை முதல் ஜெயவர்ஷினியை காணவில்லை என அவரது தாயார், உறவினர்கள் வீடு மற்றும் அக்கம் பக்கத்தில் தேடி வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் ஜெயவர்ஷினி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளாது. இதனையடுத்து வெப்படை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற மீட்பு பணியில், ஜெயவர்ஷினி சடலமாக மீட்கப்பட்டார்.மீட்கப்பட்ட சடலத்தை வெப்படை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment