News
கொரோனா இருப்பதாக கூறிய கல்லூரி மாணவி: பேருந்தில் பரபரப்பு

கோவையில் இருந்து சென்னை நோக்கி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர் திடீரென எழுந்து தனக்கு கொரோனா இருப்பதாகவும் உடனடியாக பேருந்தை நிறுத்தும்படியும் கூறினார்
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பேருந்தை நிறுத்தி உள்ளார். உடனே அந்தப் பெண் பேருந்தில் இருந்து இறங்கி பின்னால் வந்த காரில் நண்பருடன் சென்று விட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்பதற்காக கொரோனா வைரஸ் இருப்பதாக பொய் கூறி பேருந்தில் இருந்து இறங்கி நண்பர்களின் காரில் அந்த மாணவி சென்றுள்ளது தெரிய வந்தது
இதனையடுத்து அந்த மாணவியுடன் பயணம் செய்ததால் தங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று அந்த பேருந்தில் உள்ள பயணிகள் கேட்டு போராட்டம் செய்தனர். இந்த நிலையில் பேருந்தில் இருந்த பயணிகளை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
