பட்டப்பகலில் கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை!! தப்பியோடிய இளைஞர்;

தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் வெளியே செல்வதற்கு கூட மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நிலைமை மாறி உள்ளது. ஏனென்றால் பெண்களுக்கு எதிரான அநீதி அதிகரித்துள்ளது.

குறிப்பாக பெண்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை ஒருபுறம் இருக்க மறுபுறம் காதலை மறுத்தால் அவர்களின் கதி என்ன ஆகுமோ என்ற அச்சமும் நிலவி கொண்டு தான் வருகிறது.

ஏனென்றால் பல இடங்களில் காதலை மறுத்தால் கல்லூரி மாணவிகள் வன்மையான முறையில் தாக்கப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரியில் கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி திருபுவனை அருகே தனியார் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாணவியை சரமாரியாக புத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய முகேஷ் என்ற இளைஞரை போலீஸ் தேடுகிறது.

மாணவியின் கொலைக்கான காரணம் என்ன?, இந்த கொலையின் பின்புறம் உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment