Connect with us

‘கல்லூரி கனவு’…நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார் ஸ்டாலின்.!!

stalin new16

தமிழகம்

‘கல்லூரி கனவு’…நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார் ஸ்டாலின்.!!

இன்றைய தினம் தமிழகத்தில் புதிய ஒரு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். அதன்படி நான் முதல்வர் திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர்கள் தான் நமது மாநிலத்தில் அறிவு சொத்துக்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு உரையாற்றினார்.

மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். பகுத்தறிவு கொண்டவர்களாக தமிழக மாணவர்களின் திறனை உயர்த்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம் என்றும் கூறினார்.

மேலும் உயர்கல்வி ஆராய்ச்சி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு அதனை மேம்படுத்தி வருகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டின் கல்வியறிவு தேசிய சராசரியை விட அதிகமாகும் என்றும் கூறினார்.

கல்லூரி படிப்புகளை கவனமாக தேர்ந்தெடுப்பது போல் கவனம் சிதறாமல் படிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் படித்து சிறந்து விளங்கியதற்கு அப்துல்கலாம், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் சான்றுகள் என்றும் கூறினார்.

இந்திய துணை கண்டத்தில் தமிழ்நாட்டிற்கு இணையான கல்வி வேறு எங்கும் இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். பொறியியல், மருத்துவம் சிறந்த துறை தான் என்றாலும் மற்ற துறைகளிலும் மாணவர்களின் கவனம் செலுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.

அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்கள் என்ற பெயரெடுக்க வேண்டும் என்பதுதான் நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம் என்று முதல்வர் ஸ்டாலின் நேரு உள்விளையாட்டு அரங்கில் பேசினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top