Connect with us

கலெக்டர் உத்தரவு: இனி மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்து வாங்கக் கூடாது! விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!!

கலெக்டர் உத்தரவு: இனி மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்து வாங்கக் கூடாது! விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!!

நம் இந்தியாவில் பல இடங்களில் பொதுமக்கள் மருந்தகங்களில் மருந்து பொருட்கள் மாத்திரைகள் வாங்குகிறார்கள். ஆனால் பொதுமக்கள் பலரும் மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்து பொருட்களை வாங்குவதாக தெரிகிறது.

இதற்கு பலரும் வன்மையாக எச்சரித்து வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்தகங்களில் மாத்திரைகள் வாங்கக்கூடாது என்று மருத்துவர்களே கூறுகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு மாவட்ட ஆட்சியர் மருத்துவர்களின் பரிந்துரை இன்றி மருந்து வாங்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை இன்றி மருந்துகள் வாங்க கூடாது என்றும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அரசு உத்தரவை மீறி மருந்து மாத்திரைகள் விட்டால் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா அறிவித்துள்ளார். மார்ச் 31 ஆம் தேதியில் கடையில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி ரம்யா உயிரிழந்ததால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top