Connect with us

குளிர் பிரதேச பென்குயின்கள் கணிசமாக குறைவு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

penguins

செய்திகள்

குளிர் பிரதேச பென்குயின்கள் கணிசமாக குறைவு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

குளிர் பிரதேச பென்குயின்கள் கணிசமாக குறைவு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

பொதுவாக நாள்தோறும் பருவநிலை மாற்றம் நிகழ்ந்து கொண்டே வருகிறது. இதனால் பூமி அதிகளவில் வெப்பமடைவதால் காரணமாக பூமியின் வட தென் துருவங்களில் உள்ள பனி அனைத்தும் உருகுகிறது. இவ்வாறு பனி உருகுவதால் கடல் மட்டமும் மிக அதிக அளவில் உயர்ந்து கொண்டே வருகிறது.

இதனால் பல பேரிழப்புகள் நிகழ்கிறது. அதோடு மட்டுமல்லாமல் பல குளிர்பிரதேச பிராணிகளும் மெல்ல மெல்ல அழிந்து கொண்டே வருகிறது. அந்த வரிசையில் அடெலி என்ற பெண்குயின்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பெண்குயின் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகின்ற நிலையில் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் அண்டார்டிகாவில் பெண்குயின்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சர்வதேச பெண்குயின் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் குளிர்ச்சியான பகுதிகளில் வசிக்க கூடிய அடெலி  இனப் பென்குயின்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. வெப்பமான பகுதிகளில் வசிக்க விரும்பும் ஜென்டூ பென்குயின்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top