தென்தமிழக மாவட்டங்களுக்கு குளிர்ச்சியான அறிவிப்பு! இதர மாவட்டங்களுக்கு எரிச்சலான தகவல்;

தமிழகத்தில் மெல்ல மெல்ல கோடை காலம் தொடங்க உள்ளது. ஏனென்றால் சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தை விட்டு முழுவதுமாக வடகிழக்கு பருவமழை அகன்றுவிட்டது. இதனால் வெயிலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டு வருகிறது.

அந்த வரிசையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வறட்சியான வானிலையை கூறியது. அதன்படி பிப்ரவரி 9ஆம் தேதி வரை நம் தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதேவேளையில் தென்தமிழக மாவட்டங்களுக்கு ஒரு இதமான குளிர்ச்சியான தகவலை அளித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 10, 11 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பிப்ரவரி 12ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment