அம்மாவின் உயிரை விட பதவி முக்கியமா? – அதிமுகவில் இருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் அறிவிப்பு!

அதிமுகவை பொறுத்தவரையில் ஒற்றை தலைமை விவகாரம் என்பது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டார்.

இத்தகைய அறிவிப்பானது ஓபிஎஸ் தரப்பினர் மத்தியில் பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் பொதுக்குழு கூட்டம் செல்லாது நீதிமன்றம் தீர்பளித்தது.

மது பிரியர்களே உஷார்!! மதுபானத்தில் செத்து மிதந்த ஈ..!!!

இந்நிலையில் நீதிபதிகளின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இபிஎஸ்-க்கு சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி இருந்தது.

இந்த சூழலில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவர்களும் சுயநலத்துடன் மோதுவதால் தற்போது அதிமுகவில் இருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

ரெடியா இருங்க!! டிச.7-ம் தேதி 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!!

ஈபிஎஸ் அணியில் இருந்த அவர் ஜெயலலிதாவின் உயிரை விட பதவி முக்கியம் என இருவரும் செயல்படுவதால் அதிமுகவில் இணைந்து செயல்பட விருப்பமில்லை என ஆடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.