கோவை சம்பவம்! 5 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது..!!

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவத்தில் கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் கார் சிலிண்டர் வெடித்து அடையாளம் தெரியாமல், உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

பின்னர் 6 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தியதில் கார் வெடிவிபத்தில் இறந்தவர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும் அவர் துணிக்கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் பொட்டாசியம் நைட்ரேட், சல்ஃபர் உள்ளிட்ட நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

அதே போல் விபத்துக்குள்ளான கார் 9 பேரிடம் கைமாறியது தெரியவந்ததையடுத்து, தற்போது 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment