சென்னை, திருச்சியை ஓரங்கட்டி புதிய மண்டலமாக கோவை உதயம்!

நம் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் புது புது மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளகுறிச்சி தனியாகப் பிரிந்து தனி மாவட்டமாக காணப்படுகிறது.

கோவை

 

இதுபோன்று தமிழ்நாட்டிலுள்ள பல மாவட்டங்கள் பிரிந்து புதிய மாவட்டங்களாக உதயம் ஆகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் மொத்தம் மூன்று மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலம் என்பது ஐந்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கியதாக காணப்படும்.

இந்த நிலையில் நம் தமிழகத்தில் தற்போது புதிதாக மேலும் ஒரு மண்டலம் உதயமாகி உள்ளது. இவை  கோவையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு அரசானை வெளியிட்டுள்ளது.

அதன்படி பொதுப்பணித் துறையில் புதிதாக கோவை மண்டலம் இன்று உதயமாகி உள்ளதாக தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. சென்னை, திருச்சி மண்டலங்களை சீரமைத்து கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் உருவாகி உள்ளது.

இவை கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம்,நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய மண்டலம் ஆகும். கோவை பொதுப்பணித்துறை மண்டலத்தில் பணியாற்ற புதிய பணியிடங்களையும் உருவாக்கி அரசு ஆணை இன்று வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment