தமிழகத்தில் முதலிடத்தை தட்டி தூக்கியது “கோவை மாவட்டம்”!!

46d6f7fc50d337392a954654adb6c952-2

தற்போது நம் தமிழகத்தில் மழைக்காலம் நிகழ்கிறது. அதன்படி தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களோடு விவசாயிகளும்  மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு இந்த கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  தமிழகத்தில் பல பகுதிகளில் குளங்கள் ,நீர்நிலைகள் வரிசையாக நிரம்பி  கொண்டு வருகிறது.608543c4b261285ef26e7c0abd01d81c

மட்டுமல்லாமல் தற்போது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழைப்பொழிவு கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 10 சென்டிமீட்டர் மழை சோலையாறு மற்றும் சின்கோனா பகுதிகளில் பெய்துள்ளது. அதனை அடுத்து சின்னக்கல்லார் பகுதியில் 9 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.

மேலும் வால்பாறை பகுதியில் ஏழு சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.மேலும் நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார் மற்றும் அவலாஞ்சியில் தலா ஐந்து சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது. பந்தலூரில் நான்கு சென்டிமீட்டர் மழை பெய்து பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு பகுதிகளில் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print