தலைமறைவாக இருந்த கோவை பள்ளி முதல்வர் கைது!

கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையை சேர்ந்த மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக சமீபத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தில் ஆசிரியர், முதல்வர் மற்றும் ஒரு சிலர் குறிப்பிட்டு இருந்த நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்தனர்

நேற்று ஆசிரியர் மிதுன் கைது செய்யப்பட்ட நிலையில் சற்று முன்னர் பெங்களூரில் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்யவும் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் ஆசிரியர் மற்றும் முதல்வர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment