கோவை கார் வெடிப்பு: வெளியான புதிய தகவல்!

கோவை கார் வெடி விபத்தியில் உயிரிழந்த ஜமேஷா முபியின் வீட்டில் 100 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை உக்கடம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் பயணித்த ஜமேஷா முபியின் என்பவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் படி, யிரிழந்த ஜமேஷா முபியின் வீட்டில் 75 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் 100 கிலோ அளவை எட்டியுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். அதே சமயம் 6-வது நபராக கைது செய்யப்பட்டுள்ள அப்சர் கான் என்பர் வீட்டில் லேப்டாப், செல்போன் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதோடு சுமார் 100 கிலோ அளவுள்ள சல்பர், பொட்டாசியம் உள்ளிட்ட வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment