கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக எண்ணிக்கை அதிகாரிகள் மேலும் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கோவையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இத்தகைய நிகழ்வு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கட்டுக் கட்டாக சிக்கிய ஹவாலா பணம்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு..!!!
இந்நிலையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தது ஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்த சூழலில் சம்பவம் குறித்து என்.ஐ.ஏ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் உயிரிழந்த ஜமேஷா முபின் ஆன்லைனில் வெடிமருந்துகள் வாங்கியதாகவும், முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனிடையே குண்டு வெடிப்பில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அடி தூள்!! டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி..!!
இந்த சூழலில் என்.ஐ.ஏ போலீசார் மேலும் 3 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதன் படி, முகம்மது தவுபீக், உமர் பரூக், பரோல் கான் ஆகிய 3 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.