உலகப் பணக்காரர்களின் பட்டியலில் நம்ம ஊரு பையன்… கோயம்புத்தூரைச் சார்ந்த இன்ஜினியர் லண்டனில் செஞ்ச சாதனை!

உலகப் பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்து கோவையைப் பிறப்பிடமாகக் கொண்ட லண்டன் தொழிலதிபர் சாதனை செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டத்தின் அருகே உள்ள செட்டிபாளையத்தை சேர்ந்தவர்தான் நந்தகுமார்.

இன்ஜினியரிங்க் பட்டதாரியான நந்தகுமார் கோவையில் கல்லூரிப் படிப்பினை முடித்துள்ளார், அதனைத் தொடர்ந்து சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலையினைப் பெற்றார்.

ஐடி நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். நிறுவனத்தில் பணியாற்றியபோதே வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

லண்டனில் சில ஆண்டுகள் பணியாற்றிய இவருக்கு எவ்வளவுநாள் தான் ஊழியராக இருப்பது என்று தோன்ற சொந்தமாக நிறுவனம் துவங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தனது நண்பர்களுடன் இணைந்து Kovaion என்ற நிறுவனத்தை லண்டனில் துவங்கியுள்ளார்.

லண்டனில் பிசினஸ் சிறப்பாகப் போக அடுத்து சென்னை, பெங்களூரில் கிளைகளை உருவாக்கியுள்ளார்.

தற்போது ஓராண்டுக்கு 3 மில்லியன் பவுண்ட்ஸ்களுக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனமாக Kovaion உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment