
தமிழகம்
கோவை ஆனந்தாஸ் உணவகங்களில் ஐ.டி. ரெய்டு!!
கோவை ஆனந்தாஸ் குழுமத்திற்கு சொந்தமான உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். கோவையில் பிரபல சைவ உணவுகளில் ஒன்றாக இருப்பது ஸ்ரீ ஆனந்தாஸ் உணவகம்.
இந்நிலையில் மொத்தம் 8 கிளைகள் உள்ள நிலையில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வரி ஏய்பு குறித்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
இதனிடையே இவர்களுக்கு சொந்தமாக இனிப்பு, உணவகங்களை தவிர மற்ற தென்மாவட்டங்களில் உள்ள 20 இடங்களில் சோதனை நடைப்பெற்று வருவதாக தெரிகிறது.
காலை 7 மணிக்கு சோதனை நடைப்பெற்று வரும் நிலையில் தற்போது 3 மணி நேரமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
