கோவையில் பயங்கரம்! ஈஷாவில் யோகா பயிற்சிக்குச் சென்ற பெண் சடலமாக மீட்பு!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் வசித்து வருபவர் பழனிக்குமார் – சுபஶ்ரீ தம்பதியினர். இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

இந்நிலையில் சுபஸ்ரீ கோவை பூண்டி அருகேயுள்ள ஈஷா யோகா மையத்துக்கு ஒரு வாரமாக பயிற்சிக்குச் சென்றிருக்கிறார். அந்த வகையில் கடந்த 18-ம் தேதி யோகா மையத்திற்கு சென்ற சுபஸ்ரீ வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

சமவேலை சம ஊதியம்! ஆய்வுக்குழு அமைக்கப்படும்.. தமிழக முதல்வர்!

இதன் காரணமாக சுபஸ்ரீயின் கணவர் பழனிக்குமார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் வெள்ளை நிற உடையில் சாலையில் ஓடும் காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கிடைவே கோவை செம்மேடு அருகே காந்தி காலணி பகுதியிலிருந்த விவசாய கிணற்றில் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் போலீசார் உடலை கைப்பற்றியதையடுத்து அவர் அணிந்திருந்த மோதிரம் மற்றும் ஈஷா யோகா ஆடையை வைத்து இந்த சடலம் சுபஸ்ரீ என்பதை கணவர் அடையாளம் காட்டினார்.

சிலிண்டர் விலை எதிரொலி: ஹோட்டல், டீ விலை உயரும் அபாயம்!!

தற்போது பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. ஈஷா யோகா மையத்துக்கு சென்ற பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.