AI பயன்பாட்டுக்கு மாறும் cognizant நிறுவனம்.! ஒட்டுமொத்த ஊழியர்கள் வேலைநீக்கமா?

AI தொழில் நுட்பம் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பல அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் இதனால் மனித உழைப்பு தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனம் முதல் பெரிய நிறுவனங்கள் வரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவது வேலைவாய்ப்பு இன்மையை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான cognizant முழுக்க AI தொழில்நுட்பத்தால் தனது பணியை தொடர உள்ளதாகவும் இதனால் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஒட்டுமொத்த ஊழியர்களும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் வேலை இழக்க நேரம் நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

பல முன்னணி நிறுவனங்கள் தற்போது AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் செல்லும் வேலையை ஒரு சில மணி நேரத்தில் செய்து விடும் என்பதால் ஊழியர்களின் வேலை கேள்விக்குறியாகியுள்ளது. 100 பேர் செய்யக்கூடிய வேலையை இந்த தொழில்நுட்பம் மிக எளிமையாக செய்து முடித்து விடும் என்றும் இதனால் உலகின் முன்னணி ஐடி நிறுவனமான cognizant நிறுவனம் AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்னர் செலவுகளை குறைப்பதற்காக 3500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக cognizant தெரிவித்தது. இந்த நிலையில் AI தொழில்நுட்பத்தில் மேலும் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருவதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய இருப்பதை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உறுதி செய்துள்ளார்.

AI தொழில்நுட்பத்தின் மூலம் டெக்னிக்கல் ஆலோசனை, வடிவமைப்பு, பொறியியல் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் ஊழியர்களின் வேலையை விரைவுப்படுத்தும் என்றும் இதனால் மனிதர்கள் செய்யும் வேலையை விட இரட்டிப்பு வேலை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.