ஜனவரி 25ஆம் தேதி வரை சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக்கூடாது!: நீதிபதிகள்

தமிழர்கள் செயல்கள் மட்டுமின்றி பொழுது போக்குகளும் வீரத்தை மையமாகக் கொண்டே காணப்படுவார்கள். அதனால்தான் தமிழர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை வீர விளையாட்டாகக் கொண்டு காணப்படுகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு நடைபெற அனுமதி கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் அலங்காநல்லூர் போன்ற பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை போன்று மற்றொரு விளையாடும் தமிழகத்தில் மிகவும் ஃபேமஸ் ஆக காணப்படுகிறது. அதுதான் சேவல் சண்டை. சேவல் சண்டை நடத்த  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து சேவல் சண்டை நடத்த அனுமதி கிடைக்கப் பட்டுள்ளது.

அதன்படி சேவல் கால்களில் பிளேடுகள், கத்திகள் இருக்க கூடாது என்றும் கூறியுள்ளது. களத்தில் போட்டியிடும் இரண்டு சேவல்களும் இறுதியில் உயிருடன் தான் இருக்க வேண்டும் என்றும் எந்த ஒரு சேவலும் இழந்துவிடக் கூடாது என்றும் திட்டவட்டமாகக் கூறுப்பட்டுள்ளது. இந்த சூழலில் சேவல் சண்டைக்கு ஜனவரி 25ஆம் தேதி வரை நடத்த அனுமதி கூடாது என்று நீதிபதிகள் கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் பூலம்வலசு கிராமத்தில் சேவல் சண்டை நடத்த தடை கோரிமனு தாக்கல் செய்யபட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜனவரி 25 ஆம் தேதி வரை தமிழகத்தில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு கூறியுள்ளது. சேவல் சண்டை: தமிழ்நாடு அரசின் நிலைபாடு என்ன? கொரோனா அதிகரிக்கும்போது சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கியது எப்படி என்று கேள்வி கேட்டுள்ளது. தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment