Connect with us

கோப்ரா படத்தின் அப்டேட் – எக்ஸ்குளுசிவ் போஸ்டர் வெளியிட்ட படக்குழு!

kopraa 2

பொழுதுபோக்கு

கோப்ரா படத்தின் அப்டேட் – எக்ஸ்குளுசிவ் போஸ்டர் வெளியிட்ட படக்குழு!

டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை சன்ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ’கேஜிஎஃப்’ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாவே உள்ளது. வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். ’மாஸ்டர்’ பட தயாரிப்பாளர் லலித்குமார் தான் இப்படத்தை தயாரிக்கிறார்.

1033 0

முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

கோப்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து. போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

kopraa 3

பான் இந்திய படமாக வெளியாக உள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 11ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோப்ரா படத்தின் எக்ஸ்குளுசிவ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த படத்தில் விக்ரம் ஏழு விதமான கெட்டப்பில் விக்ரம் நடித்துள்ளார்.

‘விக்ரம்’ படம் ஓடிடியில் 98 கோடிக்கு விற்பனையா? அப்போ ரிலீஸ் தேதி எப்போ?

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top