#Alert “சூறாவளிக் காற்று சுழற்றி அடிக்கும்”; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!

கடலோரப் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

தென் தமிழக கடலோர பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 1500 க்கு ம் மேற்பட்ட விசைப்படகுகள் 3000 மேற்பட்ட நாட்டு படகுகள்இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதன் காரணமாக 20,000 மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதியில் மணிக்கு20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.