முதல்வர் சொல்லியும் கேட்காத கவுன்சிலர்..!! திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சி உண்ணாவிரதப் போராட்டம்!!!
பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு பிப்ரவரி 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மார்ச் 4 ஆம் தேதி வேட்பாளர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.
இதில் திமுக கட்சி கூட்டணி வேட்பாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். ஏனென்றால் திமுக கூட்டணிக்கு அறிவித்த பல இடங்களில் திமுகவின் போட்டி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இதனால் திமுக கூட்டணி கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுவர் என்று அறிவித்திருந்தார்.
இதன் ஒரு கட்டமாக வரிசையாக கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கூட்டணி கட்சி தற்போது திமுகவுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவியை விட்டுத் தர கோரி திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. காங்கிரசுக்கு ஒதுக்கிய இடத்தில் திமுக வேட்பாளர் போட்டியில் வென்றதால் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.
