ஆளும் பாஜகவிற்கு பின்னடைவா? உத்தர பிரதேசத்தில் கூட்டணி எம்எல்ஏ ராஜினாமா!

இந்தியாவில் பிப்ரவரி மாதம் ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதிலும் குறிப்பாக பாஜக ஆட்சி செய்யும் உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உத்தர  பிரதேச மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக பெரும் பின்னடைவு நிகழ்வதாக காணப்படுகிறது. பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள்,அமைச்சர்கள்  வரிசையாக ராஜினாமா செய்து கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாஜக மாநில அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதோடு பாஜக மீது குற்றச் சாட்டையும் வைத்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் பாஜக கூட்டணி எம்எல்ஏ தற்போது ராஜினாமா செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி உத்தர பிரதேசத்தில் பாஜக கூட்டணி கட்சியான அப்னா தள் கட்சியின் எம்எல்ஏ சவுத்ரி அமர் சிங் ராஜினாமா செய்துள்ளார்.

சவுத்ரி அமர் சிங் ராஜினாமா செய்த உடன் சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாக சவுத்ரி அமர் சிங் அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இதுவரை மூன்று அமைச்சர்கள், 7 எம்எல்ஏக்கள் பதவி விலகியுள்ளனர். இதனால் உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment