Connect with us

நிலக்கரி தட்டுப்பாடு: தூத்துக்குடியில் மின்சார உற்பத்தி நிறுத்தம் !!

electric post

தமிழகம்

நிலக்கரி தட்டுப்பாடு: தூத்துக்குடியில் மின்சார உற்பத்தி நிறுத்தம் !!

நிலக்கரி தட்டுப்பாடு: தூத்துக்குடியில் மின்சார உற்பத்தி நிறுத்தம் !!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நாளொன்றுக்கு 17,000 முதல் 18, 000 நிலக்கரி தேவை.

இந்நிலையில் இந்தியாவில் உற்பத்தியாகும் நிலக்கரி தான் கப்பல் வழியாக தூத்துக்குடி வந்து சேர்கிறது. தற்போது கப்பல் மூலம் ஒரு யூனிட்டுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே வந்து சேர்வதால் அதற்கான மின் உற்பத்தி மட்டுமே செய்யப்படுகிறது.

இதனிடையே 2 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பில் வைத்திருக்கக்கூடிய தூத்துக்குடி அனல் மின் நிலையம் தற்போது நிலக்கரி கையிருப்பு  இல்லை என தெரிகிறது.

இதனால் அன்றாடம் வரக்கூடிய நிலக்கரியை வைத்து ஒன்று அல்லது இரண்டு யூனிட்டுகள் இயக்கப்படுவதாக அனல்மின் நிலையம் கூறியுள்ளது.

மேலும் , 5 யூனிட்டுகளில் ஒன்றில் மட்டும் 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் நிலக்கரி தட்டுப்பாட்டால் 4 யூனிட்டுகளில் மின்சார உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மின்சாரத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top