தூத்துக்குடியில் பழமையான 5 அலகுகள் கொண்ட அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு அலகிற்கு 210 என்ற விகிதத்தில் 5 அலகிற்கு 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த 6 மாதங்களில் 4 அலகுகளில் மின்சார உற்பத்தி ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே மின்சார உற்பத்திற்கு நாளொன்றுக்கு 17 ஆயிரம் முதல் 18 ஆயிரம் நிலக்கரி உற்பத்தி தேவைப்படும். ஆனால் சமீபகாலமாக நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு வந்ததால் ஒவ்வொரு அலகுகளாக படிபடியாக குறைக்கப்பட்டு வந்தது.
இந்த சூழலில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல்கள் வழியாக 50 ஆயிரம் நிலக்கரி தூத்துக்குடிக்கு வந்தது. இதனை வைத்து 5 அலகுகளும் இயங்கிக் கொண்டு வந்தது. தற்போது நிலக்கரி இல்லாமல் போனதால் 2 அலகுகள் மட்டும் இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், மத்திய அரசு தரக்கூடிய நிலக்கரியை குறைவாக தருவதால்தான் மின்சார உற்பத்தி பாதிபடைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் தமிழகத்தில் மின் வெட்டு ஏற்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது