Connect with us

2022 ஏப்ரலில் மட்டும் சுமார் 661.54 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி!!:மத்திய அரசு

Coal

News

2022 ஏப்ரலில் மட்டும் சுமார் 661.54 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி!!:மத்திய அரசு

நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டது. அதுவும் குறிப்பாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி வேலையும் பாதிக்கப்பட்டது. ஏனென்றால் தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை அதிகமாக இருந்தது.

உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலின் இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதன் பின்பு விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழகத்திற்கு 30 ஆயிரம் டன் நிலக்கரி கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில்  நாட்டில் நிலக்கரி உற்பத்தியில் சுமார் 661.54 லட்சம் டன் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

நாட்டின் நிலக்கரி உற்பத்தி ஏப்ரல் 2022 மட்டும் 661.54 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது. கடந்த ஏப்ரலில் மின் துறைக்கு மட்டும் சுமார் 617.2 லட்சம் டன் நிலக்கரி வழங்கப்பட்டது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

2021-2022 ஆம் நிதி ஆண்டில் மொத்த நிலக்கரி உற்பத்தி சுமார்  7770.23 லட்சம் டன்னாக உள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top