தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தல் எப்போது? அதிரடி அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள சுமார் 20 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் கூட்டுறவு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது என்பதும் இந்த அறிவிப்பு கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல பதிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிர முயற்சி செய்து வருகின்றனர் என்பதும் இந்த தேர்தலில் வெற்றி பெறுவதை வெற்றிபெற காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தீவிர முயற்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்று வெற்றி பெறுவதை திமுக தனது நோக்கமாகக் கொண்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.