Tamil Nadu
மக்களை சந்திக்கும் முதல்வர்: ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்துக்கள்
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது தலைமைச் செயலகத்தில் மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று வருகிறார் என்ற தகவல் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது
முதலமைச்சர் என்றாலே மக்களிடமிருந்து தூரத்தில் இருப்பவர் என்று தான் இதுவரை இருந்த நிலையில் தற்போது மக்களிடம் மனுக்களை நேரடியாக அவரே பெறுவது அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. இதனை அடுத்து இன்று காலை 10 மணி முதல் முதல்வரிடம் நேரில் மனுக்களை தருவதற்காக பலர் குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மக்களை கவரும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று மனுக்களை நேரடியாக மக்களிடம் இருந்து பெறுவது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே உங்கள் தொகுதிகயில் ஸ்டாலின் என்ற பெயரில் மனுக்கள் பெறப்பட்டு திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி அதன்படி உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற ஒரு துறையை அமைக்கப்பட்டு அதற்கெனவே ஒரு அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
