பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல்வருக்காக சிறப்பு பெட்டி.. என்னென்ன வசதிகள்?

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தென்காசி செல்ல இருப்பதை அடுத்து அவர் செல்லும் ரயிலில் புதிய பெட்டி இணைக்கப்பட இருப்பதாகவும் அந்தப் பெட்டியில் பல நவீன வசதிகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தென்காசியில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று கிளம்புகிறார். பொதுவாக முதல்வர் தென்மாவட்டங்களுக்கு செல்லும் போது மதுரை அல்லது திருநெல்வேலி வரை விமானத்தில் சென்று விட்டு அதன் பிறகு அங்கிருந்து காரில் செல்வது வழக்கம்.

ஆனால் இம்முறை அவர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தென்காசி செல்ல இருக்கிறார். இந்த ரயிலில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

pothigaiஇந்த பெட்டியில் இரண்டு படுக்கை அறைகள் இருப்பதாகவும் ஏசி வசதி இருப்பதாகவும் அது மட்டுமின்றி சோபா, மீட்டிங் ஹால் வசதியும் உண்டு என்றும் கூறப்படுகிறது. சமையல் பொருட்களுடன் கூடிய சமையலறை, டைனிங் ஹால், வெந்நீர் தொட்டி, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட வசதிகளும் இந்த பெட்டியில் இருப்பதாகவும் அதன் பின்புறத்தில் இயற்கையை ரசிக்கும் வகையில் பெரிய ஜன்னல் வசதியும் இருப்பதாகவும் கூறப்படுகிறது .

பொதுவாக இம்மாதிரி சிறப்பு பேட்டிகள் ரயிலில் பிரதமர் அல்லது குடியரசுத் தலைவர் பயணத்தின்போது இணைக்கப்படும் என்றும் ஆனால் தற்போது முதலமைச்சருக்காக இந்த பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் முதல்வருடன் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளும் இதில் பயணம் செய்ய உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.