முதல்வர் இன்று இரவு கோவை பயணம்-என்ன காரணமாக இருக்கும்?

2021 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவில் திமுக பெரும்பான்மை நிரூபித்து ஆட்சியை கைப்பற்றியது. என்னதான் திமுக பெருபான்மை நிரூபித்திருந்தாலும் கோவை சுற்றுவட்டார பகுதிகளில் அதிமுகவின் கைதான் ஓங்கி இருந்தது.

இதனால் திமுகவினர் அடுத்தடுத்து கோவைக்கு பல திட்டங்களை அறிவித்தனர். மேலும் அவ்வப்போது கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சுற்றுப்பயணமும் மேற்கொண்டனர்.

அந்த வகையில் இன்றைய தினம் மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் கோவை பயணம் மேற்கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது. இன்று இரவு ஏழு மணிக்கு சென்னையில் இருந்து விமான மூலம் கோவை செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இன்று இரவு 8.20 மணிக்கு கோவையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை செல்லும் முதலமைச்சர் அங்கு இரவு தங்குகிறார். கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நான்கு நாள் சுற்றுப்பயணம் செய்த பிறகு ஆகஸ்ட் 26 ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment