கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் அதிகமான இடங்களில் சுகாதாரத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
நேற்று கோவை உள்ளிட்ட இடங்களில் முக்கிய ஜவுளி நிறுவனத்தில் மாஸ்க் அணியாத நபர்களுக்கு அபராதம் விதித்தனர்.
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர்களுக்கு கொரோனாவின் புதிய வடிவமான ஓமிக்ரான் பரவாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களும் தடுப்பூசி முகாம்களை நேற்று தொடங்கி வைத்தார் இன்றும் தலைமை செயலகத்தில் இருந்து திரும்புகையில் சிலர் முக கவசம் அணியாமல் இருந்ததை பார்த்து அவர்களுக்கு முக கவசம் வழங்கினார்.
தலைமைச் செயலகத்திலிருந்து முகாம் அலுவலகம் திரும்புகையில், சிலர் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பதை கவனித்தேன். அவர்களுக்கு முகக்கவசம் வழங்கினேன்.
அனைவரும் தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள்!
தடுப்பூசி- முகக்கவசம்- கிருமிநாசினி- தனிமனித இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிப்பீர்! pic.twitter.com/Xex4Nk9jh5
— M.K.Stalin (@mkstalin) January 4, 2022